
பழம்பெரும் தெலுங்கு நடிகர் விஜய ரங்கராஜு. இவர் தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நிலையில் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படிக்காதவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் முதல் முதலாக தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த பைரவ தீவீபம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இவருக்கு சென்னையில் இருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் இன்று காலமானார். மேலும் அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.