
நாடாளுமன்ற மக்களவில் அத்துமீறி நுழைய முயன்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் திடீரென நுழைய முயன்ற நபர்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கண்ணீர் புகை வீசப்பட்டதால் எம்பிக்கள் சிலர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குப்பியை ஏந்தி மக்களவையில் நுழைந்த இருவர் பிடிபட்டனர்.நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று நடந்த அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறிய இருவரும் வண்ணத்தை உமிழும் பொருளை வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பார்வையாளர்களாக வந்த இருவர் கண்ணீர் புகை குப்பியை வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓடி வந்த நபர்களை பாதுகாவலர்கள் பிடித்து சென்றனர். இருவரும் சர்வாதிகாரம் கூடாது என முழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினத்தன்று மக்களவை கூட்டத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் புகை சூழ்ந்தது புகை சூழ்ந்ததை தொடர்ந்து மக்களவையில் இருந்து எம்பிக்கள் அவசர அவசரமாக வெளியேறினர்.
மக்களவையில் அத்துமீறிய இரு ஆண்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவருடன் வந்த இரு பெண்களும் பிடிபட்டனர். மக்களவையின் உள்ளே நுழைந்த ஆண்களுக்கு ஆதரவாக வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்களும் கைது செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதையடுத்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்..
Security breach outside the parliament too. What’s happening?
— Prashant Kumar (@scribe_prashant) December 13, 2023
Complete lapse of security that too on the day on which #ParliamentAttack had happened. Should be thoroughly investigated. If they could take tear gas inside parliam, they could have taken other weapons as well.
How did the security allow this? pic.twitter.com/9GGDuMiVtA
— Indian Right Wing Community (@indianrightwing) December 13, 2023
#WATCH | An unidentified man jumps from the visitor's gallery of Lok Sabha after which there was a slight commotion and the House was adjourned. pic.twitter.com/Fas1LQyaO4
— ANI (@ANI) December 13, 2023
https://twitter.com/ApurvamishraAAP/status/1734843637106889133