தேனி மாவட்டத்திலுள்ள டி. கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ் சாலையை மாடுகள் கடந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பேருந்து மாடுகள் மீது மோதியது. அரசு பேருந்து மோதிய விபத்தில் 18 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் காயம் அடைந்துள்ளது.

தேவாரம் பகுதியைச் சேர்ந்த சுருளிச்சாமி என்பவர் 100-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவமைத்து மேய்த்து வருகிறார். இவரது மாடுகள் மீதுதான் அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்ட நிலையில் தற்போது அரசு பேருந்து ஓட்டுநர் அழகர்சாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.