
தமிழக அரசுக்கு சொந்தமானது ஆவின் நிறுவனம். இந்த நிறுவனத்தில் பால், தயிர், நெய் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பல வகையான பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதன் காரணமாக பண்டிகை தினத்தை முன்னிட்டு நாளை முதல் ஆவின் ஐஸ்கிரீம்களில் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பண்டிகை காலத்தை முன்னிட்டு குறிப்பிட்ட சில ஐஸ்கிரீம் வகைகளுக்கு மட்டும் 10 சதவீதம் வரை நாளை முதல் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று புதிதாக ஆவின் பாலகங்கள் வைக்க விரும்புவோர் உடனடியாக விண்ணப்பிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.