
டெல்லி உச்சநீதிமன்றத்தில் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசியல் சாசனத்தின் 14 வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை. அதன்பிறகு பட்டியலின உள்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படவில்லை.
இதன் காரணமாக அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதில் எந்த தடையும் இல்லை. இந்த தீர்ப்பினை 7 நீதிபதிகள் வழங்கிய நிலையில் 6 நீதிபதிகள் ஒருமித்த உத்தரவு பிறப்பித்த நிலையில் நீதிபதி பேலா திரிவேதி மட்டும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு, பீகார், அரியானா ஆகிய மாநிலங்களில் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் எந்த ஒரு தடையும் கிடையாது என உச்ச நீதிமன்றம் இறுதியில் உத்தரவு பிறப்பித்துள்ளது.