புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தி பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கார்த்திக் என்ற 27 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.