குஜராத் மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பனஸ்கந்தா மாவட்டம் தீசா நகரில் தொழில்பேட்டையில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

தரைமட்டமான பட்டாசு ஆலையில் இருந்து படுகாயங்களுடன் 4 பேர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து வழக்கப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.