
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பைநாயக்கன் பட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்று தேடி வருகிறார்கள். மேலும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது உரிய பாதுகாப்பு இன்றி பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.