திருநெல்வேலியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பாக இளைஞர் ஒருவர் பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று நீதிமன்றத்தின் முன்பாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக மாயாண்டி என்ற வாலிபர் நீதிமன்றத்திற்கு வந்தார். இவரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நீதிமன்ற வளாகத்தின்  முன்பாகவே சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.

அந்த வாலிபரின் முகத்தை அவர்கள் சிதைத்த நிலையில் பின்னர் காரில் ஏறி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இன்று பட்ட பகலில் வாலிபர் நீதிமன்றத்தின் வளாகத்தின் முன்பாகவே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.