பிரதமர் மோடி இன்று அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் உள்ள ரயில் நிலையத்தில் பிகனேர்- மும்பை விரைவு ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து பிரதமர் மோடி பேசியதாவது, பாரதமாதாவின் சேவகனான மோடி நெஞ்சை நிமிர்த்து இங்கே நிற்கிறேன். மோடியின் எண்ணம் நிதானமாக தான் இருக்கும். ஆனால் மோடியின் ரத்தம் கொதிக்கிறது. மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை. சிந்தூர்தான் ஓடுகிறது என ஆபரேஷன் சிந்துரை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியுள்ளார்