தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்பிறகு கனமழையின் எதிரொலியாக அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்கள் விடுமுறை குறித்த அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.

கடந்த 22 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அந்த விடுமுறையை ஈடு செய்யும் விதத்தில் நாளை அதாவது சனிக்கிழமை பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என்று தற்போது ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.