டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் ஒருவர் தன்னைத்தானே தீ வைத்துக் கொளுத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அந்த நபருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர் எந்த காரணத்திற்காக தீ வைத்து கொளுத்திக் கொண்டார் என்ற விவரம் தெரிய வராத நிலையில் அது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.