
தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகத்திலிருந்து வைஷ்ணவி விலகி திமுகவில் இணைந்தார். அவரோடு பல இளைஞர்களும் தமிழக வெற்றிக்கழகத்தில் இருந்து விலகி திமுகவில் செந்தில் பாலாஜி முன்னிலையில் இணைந்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகியுள்ளார். அதாவது நாகையைச் சேர்ந்த தமிழக வெற்றிக்கழகத்தின் ஒன்றிய செயலாளர் ஜெகபர்தீன் என்பவர் தற்போது தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். இவரது காரில் இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி கழட்டப்பட்டு திமுகவின் கொடி ஏற்றப்பட்டது.
அதாவது தமிழக வெற்றி கழகத்தில் நலத்திட்ட உதவிகளை சொந்த செலவில் செய்ய சொல்வதாக குற்றம் சாட்டிய அவர் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதன் காரணமாகத்தான் அவர் தமிழக வெற்றிக்கழகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் தொடர்ந்து இப்படி நிர்வாகிகள் விலகுவது விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.