தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் அமீர். இவர் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் இயக்குனராக மட்டுமின்றி படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குனர் ஆமீர் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக கூறியுள்ளார்.

அதாவது நடிகர் விஜய் தன்னை அழைத்தால் நிச்சயம் தமிழக வெற்றி கழகத்தில் இணைவேன் என்று கூறினார். அதோடு நடிகர் விஜய் சீமானுடன் இணைந்து பணிபுரிய இருப்பதாகவும் கூறினார். மேலும் பாசிசத்திற்கும் ஆரியத்திற்கும் எதிரானது தான் திராவிடம் என்றும், அதுதான் திராவிடத்தின் அடையாளம் என்றும் கூறியவர் அந்த உணர்வு நம்முடைய ரத்தத்திலேயே கலந்துள்ளது என்றும் தெரிவித்தார்.