
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இந்தியர் பலியானது குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது இந்திய தூதரகம்..
துருக்கி, சிரியாவில் கடந்த 6ஆம் தேதி அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கத்தால் பெரிய பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்து ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அந்த நாடுகளில் மீட்பு பணி என்பது நடைபெற்று வருகிறது. இந்தியா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் துருக்கிக்கு உதவி செய்து வருகின்றது.
இந்நிலையில் துருக்கியில் பிப்ரவரி 6ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மாலத்யா நகரில் உள்ள ஹோட்டலின் இடுபாடுகளுக்குள் இருந்து இந்தியாவைச் சேர்ந்த விஜய குமாரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இந்தியயர் பலியானது குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது இந்திய தூதரகம்.
“பிப்ரவரி 6 நிலநடுக்கத்தில் இருந்து துர்கியேவில் காணாமல் போன இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜய் குமாரின் சடலம் மாலத்யாவில் உள்ள ஒரு ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது” என அங்காராவில் உள்ள இந்திய தூதரகம் ட்வீட் செய்துள்ளது.
Death of an Indian national, missing in Turkey since the earthquake, confirmed.
"Mortal remains of Vijay Kumar, an Indian national missing in Turkiye since Feb 6 earthquake, have been found and identified among the debris of a hotel in Malatya," tweets Embassy of India, Ankara pic.twitter.com/qF46JsX23Z
— ANI (@ANI) February 11, 2023