தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 முதல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. இதன் காரணமாக தற்போதைய சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். சென்னையிலிருந்து நேற்று மட்டும் பேருந்துகளில் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், கொச்சின், திருவனந்தபுரம், சேலம், கோவை, திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி செல்லும் விமான கட்டணங்கள் கிட்டதட்ட 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண கட்டணம் 8976 ரூபாயிலிருந்து 13,317 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோன்று சென்னையில் இருந்து மதுரைக்கு அதிகபட்சமாக 11,749 முதல் 17,745 வரை உயர்ந்துள்ளது. மேலும் கிட்டத்தட்ட 15 ஆயிரத்துக்கும் மேல் விமான கட்டணங்களின்  விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.