
திமுக கட்சியின் எம்.பி தயாநிதிமாறன் மீது தற்போது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு தயாநிதிமாறன் சென்னையில் பேட்டி அளித்தபோது தாழ்த்தப்பட்டவர்களைப் போல் முதன்மை செயலாளர் சண்முகம் மரியாதை இன்றி நடத்தியதாக கூறியிருந்தார்.
இது தொடர்பாக அப்போது அவர் மீது கோவை B3 காவல் நிலையத்தில் ஜெகநாதன் என்பவர் புகார் கொடுத்திருந்தார். மேலும் இந்த புகாரை தொடர்ந்து தற்போது எம்பி தயாநிதி மாறன் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.