அதிமுக கட்சியின் சார்பில் நேற்று தலைமை அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. மகளிர் தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட வாழ்த்து குறிப்பில் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டியிருந்தார். அதோடு  திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அடுத்து 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் போது பெண்களுக்கு பாதுகாப்பு என்பது பலப்டுத்தப்படும். என்று கூறினார். இந்த நிலையில் தற்போது அதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது மகளிர் நலனுக்காக மாற்றம் வேண்டும் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிச்சாமி இன்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

அதாவது பெண்களுக்கு எதிராக இந்த ஆட்சியில் அதிக குற்றங்கள் நடக்கும் நிலையில் அடுத்து வரும் தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகட்டி இந்த அரசை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே விஜய் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார்.