திமுக கட்சியிலிருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக வணிகர் பிரிவு மாவட்ட தலைவர் சர்புதீன் திமுகவில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் வடசென்னை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு அக்கட்சியிலிருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

மேலும் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் கட்சிகளில் புதிய நிர்வாகிகளை இணைப்பது மற்றும் மாற்றுக் கட்சியினரை இணைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது திமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் விலகி மாற்றுக் கட்சியில் இணைந்தது திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.