
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் காங்கிரஸ் முன்னிலையிலும் பாஜக பின்னடைவையும் சந்தித்தது.
இதில் ஹரியானாவில் 25 இடங்களில் மற்றும் முன்னிலையில் இருந்த பாஜக திடீர் திருப்பமாக 44 இடங்கள் முன்னிலையில் இருக்கிறது. அதன்பிறகு காங்கிரஸ் 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து காலை முதல் முன்னிலை வகித்த காங்கிரஸ் திடீரென 30 இடங்கள் வரை பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணி 51 இடங்களில் முன்னில வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்..