
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி கொடியை தொடங்கிய நிலையில் சமீபத்தில் கட்சி கொடியினை அறிமுகப்படுத்தினார். இந்த கொடியில் யானை சின்னம் இருந்ததால் பகுஜன் சமாஜ் கட்சியினர் தேசிய கட்சியான எங்கள் சின்னத்தை அவர்கள் வைத்துள்ளார்கள் என்றும் எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தனர்.
இதனால் நடிகர் விஜயின் கட்சி கொடிக்கு சிக்கல் வரும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என பகுஜன் சமாஜ் கட்சிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளது.
அதில் கட்சிகளின் கொடிகள், அதில் இடம்பெற்றுள்ள உருவங்களுக்கு ஒப்புதலோ, அங்கீகாரமோ தேர்தல் ஆணையம் கொடுப்பதில்லை. எனவே கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அந்தந்த கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடிக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.