தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் இன்று புதுச்சேரியில் நீண்ட நேரமாக மையம் கொண்டிருந்த நிலையில் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்தது. இருப்பினும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நாளை விழுப்புரம் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது கடலூர் மாவட்டத்திலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்திலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.