தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிகள் நாளையும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வங்கக்கடலில் டானா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் நாளை அது கரையை கடக்க உள்ளது.

இது ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்கிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் புயலால் தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது