
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இன்று முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது