தமிழக வெற்றி கழகத்தின் கொடி நாளை அறிமுகமாகும் என தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது பெரும் வரம். அப்படியான வரமாக இருவரும் இயற்கையும் அமைத்து கொடுத்த நாள் தான் ஆகஸ்ட் 22. தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து நம் வீரத்தின் முக்கியமான அடையாளமாக திகழும் கொடி நாளை அறிமுகமாகும்.

நம்முடைய மாநிலத்தின் அடையாளமாக மாறப்போகும் வீரக்கொடியை வெற்றிக் கொடையை நம்முடைய தலைமைச் செயலகத்தில் நாளை அறிமுகப்படுத்த இருக்கிறோம். மேலும் கழகக் கொடி பாடலை வெளியிட்டு கழக கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக பதிவிடப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நாளை கொடி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.