தமிழகத்தில் நேற்று திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று 5-வது முறையாக வேளாண்மை முறையாக வேளாண் பட்ஜெட் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வேளாண்மை துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

தமிழகத்தில் அதிக விளைச்சல் தரும் விவசாயிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். அதன்படி முதல் பரிசாக 2.50 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 1.50 லட்ச ரூபாயும், மூன்றாம் பரிசாக ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்பட்டியலின விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய தொகை 60 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.