
தமிழக சட்டசபை இன்று ஆண்டின் முதல் நாள் கூடியது. இந்த கூட்ட தொடரின் போது ஆளுநர் ரவி தேசிய கீதத்தை அவமதித்ததாக வெளியேறினார். இதனால் ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்தார். அதன் பிறகு சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது தொடர்பான அலுவல் கூட்டம் சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் ஜனவரி 11ஆம் தேதி வரை சட்டசபை நடைபெறும் என்று அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் இன்னும் 5 நாட்களுக்கு தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.