தமிழக சட்டப்பேரவையில் 2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்டம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி தினமும் 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்திற்கு விசிக மற்றும் இடது சாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையை விட்டு கட்சியின் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

மேலும் இந்த புதிய சட்ட திருத்த மசோதா தொழிலாளர்களின் விருப்ப தேர்வாக இருக்கும் எனவும், இது கட்டாயம் அல்ல எனவும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சிவி கணேசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.