
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று அதிமுக சார்பில் பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டம் நடைபெற்றது.
அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதேபோன்று வள்ளுவர் கோட்டம் முன்பாக சம்பவத்திற்கு கன்னடம் தெரிவித்து போராட முயன்ற பாஜகவினரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்பாக ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.