
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூர் பகுதியில் செயல்படாத நிலையில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த சுமார் 2000 லிட்டர் மொத்தனால் மற்றும் ரசாயனங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அந்த தகவலின் படி சோதனை செய்தனர். அப்போது 2000 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அந்த பெட்ரோல் பங்குக்கு சீல் வைத்துள்ளனர். மேலும் தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் கைதான மாதேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது அங்கு மெத்தனால் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் தான் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 2000 லிட்டர் மெத்தனால் இருப்பது தெரியவந்த நிலையில் பெட்ரோல் பங்குக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.