
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. வங்க கடலில் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழகத்தில் மழை இன்னும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தற்போது அடுத்த 2 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக 29 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், நாகப்பட்டினம், திருச்சி, நாமக்கல், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.