தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இரவு 7:00 மணி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மயிலாடுதுறை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.