
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொது தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெறுகிறது. கொரோனா பரவல் மற்றும் வெயில் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் முன்கூட்டியே தேர்வை நடத்தி முடித்து 22 ஆம் தேதி முதல் 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.