தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 65 பேர் பலியான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் மீண்டும் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

அதாவது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே டி. குமாரமங்கலம் பகுதியில் 3 பேர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வந்த டி. ஜெயராமன் என்ற முதியவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.