தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. கடந்த 3-ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த டோக்கனில் குறிப்பிடப்பட்ட தேதியில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை டோக்கன் பெற தவறியவர்கள் ரேஷன் கடைகளில் நேரடியாக சென்று கூட பெற்றுக் கொள்ளலாம்.

பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த முறை 1000 ரூபாய் ரொக்க பரிசு கிடைக்காதது பொதுமக்களுக்கு சற்று ஏமாற்றம் தான். இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று  பொங்கல் பரிசு தொகுப்பு பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.