தமிழ்நாட்டில் சமீப காலமாக போலீசார் ரவுடிகளை என்கவுண்டரில் சுட்டு பிடிக்கிறார்கள். சமீபத்தில் கூட இராணி கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட ஜாவித் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.

அதாவது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆப்பூர் பகுதியில் போலீசாரை தாக்கி விட்டு ரவுடி அசோக் தப்பி ஓட முயன்றார். இதனால் போலீசார் அசோக்கை காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயம் அடைந்த அசோக் கீழே சுருண்டு விழுந்த நிலையில் அவரை கைது செய்த போலீசார் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் அசோக் மீது கொலை கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.