வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற உள்ளது. இது நாளை மறுநாள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாளை மறுநாள் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நாளையும் சில மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக நாளை கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.