வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று மற்றும் நாளை ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கனமழை  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

அதாவது மழை தொடர்பான அறிவிப்புகளை முந்தைய தினம் இரவே அறிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக நாளை கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை வழங்கிய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.