
தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் கோவில் யானைகளுடன் செல்வி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதாவது திருச்செந்தூரில் கோவில் யானை மிதித்ததில் இருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்செந்தூரில் உள்ள யானையுடன் யானை பாகனின் உறவினர்கள் செல்பி எடுத்து அதனை கோபப்படுத்தியதால்தான் மிதித்து கொன்றதாக கூறப்பட்டது. அந்த யானை பாகன் மற்றும் அவருடைய உறவினர் ஒருவரை மிதித்து கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை இனிமேல் கோவில் யானைகளுடன் யாரும் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்துக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.