
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சர்வதேச அளவில் 20 லட்சம் லேப்டாப்கள் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. மேலும் இந்த புதிய லேப்டாப்பில் 8ஜிபி ரேம், 250 ஜிபி SSD, 14 or 15 inch திரை, ப்ளூடூத், 720p HD cam ஆகிய அம்சங்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.