வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்ற நிலையில் அது தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்று புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டிலும் 12 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி காஞ்சிபுரம், திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று நாகூர் தர்கா விழாவை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்று கனமழை  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.