தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்க தொகை வழங்குவது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 200 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்த போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 625 ஊக்கத்தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்பிறகு 151 நாட்கள் முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் ஊக்க தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 91 நாட்கள் முதல் 151 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.