திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  துத்திப்பட்டு பகுதியில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் மற்றும் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்ற பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.