
ஐபிஎல் 2025 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வந்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா, தடை செய்யப்பட்ட போதைப்பொருள் (recreational drug) பயன்படுத்தியதற்காக சோதனையில் தவறியதால், அவருக்கு இடைக்காலமாக விளையாட்டிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ரபாடா தனது சமூக ஊடகங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, “தற்போது நான் தென் ஆப்பிரிக்காவிற்கு திரும்பியுள்ளேன். இது எனது தவறான முடிவின் விளைவாகும். கிரிக்கெட் விளையாடும் சிறப்பை இனி ஒருபோதும் நான் குறைவாக மதிக்க மாட்டேன்” என வருத்தம் தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரின் நடுப்பகுதியில், “தனிப்பட்ட காரணங்கள்” என excuse கூறி அணியை விட்டு வெளியேறிய ரபாடா, தற்போது அந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவர் மீது சஸ்பென்ஷன் விதிக்கப்பட்டது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தவறை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்துள்ள ரபாடா, மீண்டும் கிரிக்கெட் துறையில் திரும்பத் தயாராக இருப்பதாகவும், உற்சாகத்துடனும் பொறுப்புடன் விளையாடுவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.