தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 640 ரூபாய் வரை கடுமையாக உயர்ந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 6695 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 2 ரூபாய் குறைந்து கிராம் 96.50 க்கும் கிலோ 96 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.