தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹280 அதிகரித்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், இன்று திடீரென ஏற்பட்ட இந்த உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கம் ₹53,720 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ₹6,715 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ₹500 உயர்ந்து ₹91,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. உலகளாவிய பொருளாதார நிலவரம் மற்றும் பிற காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது.

இந்த விலை உயர்வு, திருமணங்கள் மற்றும் பிற சிறப்பு நிகழ்வுகளுக்காக தங்கம் வாங்கத் திட்டமிட்டவர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தங்கம் வாங்குவதற்கு முன் பொதுமக்கள் பலமுறை சிந்திக்க வேண்டியுள்ளது  சூழ்நிலை நிலவிவருகிறது.