இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இனிமேல் ஒருநாள் தொடர்களில் மட்டும் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.

தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாடி வரும் நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரோஹித் சர்மாவுக்கு தற்போது 38 வயது ஆகும் நிலையில் இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் 116 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் மொத்தமாக 4302 ரன்கள் வரை குவித்துள்ளார். இவரின் அதிகபட்ச ஸ்கோர் 212 ரன்கள். மேலும் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி எனவும் இனிமேல் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே விளையாடுவேன் எனவும் ரோகித் சர்மா தன்னுடைய instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.