
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே உலகக்கோப்பைக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்த நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி தன்னுடைய 14 ஆண்டுகால டெஸ்ட் பயணம் முடிவுக்கு வருவதாகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி மொத்தம் 9230 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சமீபத்தில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் விராட் கோலியும் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram