
பிரபல இசையமைப்பாளரான இளையராஜா முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இசைஞானியின் பாடல்களை பிடிக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். இந்த நிலையில் இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்போனியை வெற்றிகரமாக அரங்கேற்றினார். அவருக்கு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இசைஞானி இளையராஜாவின் நூற்றாண்டு கால திரையிசை பயணத்தை அரசு சார்பில் கொண்டாட முடிவு எடுத்திருப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வகையில் இசைஞானி இளையராஜாவுக்கு ஜூன் 2-ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.