
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நாடு முழுவதும் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக ஹேமந்த் சோரன் இருக்கிறார். தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவைப்படும் நிலையில் ஜெஎம்எம் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
அதன்படி காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 50 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் பாஜக 30 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. இதன் காரணமாக கிட்டத்தட்ட ஜார்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வெற்றியை உறுதி செய்துள்ளது. அதன் பிறகு மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி 222 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதன் பிறகு இந்தியா கூட்டணி 54 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் பிற கட்சிகள் 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பாஜக வெற்றியை உறுதி செய்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக வெற்றியை உறுதி செய்ததை தொடர்ந்து அதனை பாஜகவினர் கொண்டாடி வருகிறார்கள்.